விஜிக்கும் மும்தாஜுக்கும் பெருசா முட்டும் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 05 Sep, 2018 01:05 pm
bigg-boss-promo-2

இந்த வாரம் கொஞ்சம் விவகாரமான டாஸ்க்குகளைத் தான் கொடுக்கிறார் பிக்பாஸ். ஏற்கனவே இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷன்கள் முடிந்திருக்கும் நிலையில், அடுத்த வார நேரடி நாமினேஷனில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இன்னொருவர் டாஸ்க் செய்ய வேண்டும் என அறிவித்திருக்கிறார் பிக்பாஸ். 

தற்போது வெளியாகியுள்ள 2வது ப்ரோமோவில், "நான் சொல்ற டாஸ்க்க நீங்க பண்ணுனீங்கன்னா, நீங்க என்ன காப்பாத்தலாம்" என ரித்விகாவிடம் சொல்கிறார் விஜய லட்சுமி. அதன் படி ரித்விகாவின் கையில் பிக்பாஸ் லோகோ நிரந்தர டாட்டூவாகப் போடப் படுகிறது. 

ரித்விகா வலி தாங்க முடியாமல் வேதனைப் படுகிறார். "ரித்து எதுக்குப் பண்றீங்க" என மும்தாஜ் கேட்க, "அவங்கள காப்பாத்தறேங்கறது ரெண்டாவது, முதல்ல நா இதை ஃபேஸ் பண்ணனும்" என்கிறார் ரித்விகா. 

பிறகு ஜனனி, பாலாஜி, சென்ட்ராயனிடம் "எனக்கு வாய் வரைக்கும் வந்துடுச்சி, நான் எதுக்கு உங்களுக்குப் பண்ணுனேனோ, அதுக்கு தான் பண்றாங்கன்னு" என சொல்லிக் கொண்டிருக்கிறார் விஜி. 

"விஜிக்கும் மும்தாஜுக்கும் பெருசா முட்டும்" என நமட்டுச் சிரிப்புடன் சொல்கிறார் சென்ட்ராயன். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close