டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ் - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 06 Sep, 2018 12:50 pm
bigg-boss-promo-1

அடுத்த வார நாமினேஷனில் இருந்து ஒருவரை காப்பாற்ற மற்றொருவர் பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்கை செய்ய வேண்டும் என்ற விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் பிக்பாஸ். 

ஜனனினைக் காப்பாற்ற பாலாஜி மொட்டைப் போட்டுக் கொண்டார். ஐஸ்வர்யாவை காப்பாற்ற சென்றாயன் தனது முடியை சிவப்பாக மாற்றிக் கொண்டார். சென்றாயனுக்காக ஐஸ்வர்யா தனது முடியை வெட்டிக் கொண்டார். விஜய லட்சுமிக்காக ரித்விகா டாட்டூ போட்டுக் கொண்டார். 

இந்த வரிசையில் ரித்விகாவை காப்பாற்ற, மும்தாஜுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார் பிக்பாஸ். "உங்களுக்குக் கொடுத்த டாஸ்க், உங்க முடியை நீங்க எலக்ட்ரிக் கிரீன் கலரா மாத்தணும்" என மும்தாஜிடம் ரித்விகா சொல்கிறார். 

"என்னால அது முடியாது. வெளில நான் செல்ஃபிஷ்ஷா தெரிஞ்சாலும் பரவால. எனக்குத் தெரியும் இது என்னால முடியாதுன்னு" என்கிறார் மும்தாஜ். 

"இல்ல அந்த கிரீன் கலர நீங்க ரொம்ப நாள் வச்சிருக்க வேண்டாம்" என்கிறார் ரித்விகா. "ரித்து அந்த கிரீன் கலர ஏத்துறதுக்கு ப்ளெண்டர் போடனும். என் முடிய ப்ளீச் பண்ண நான் ரெடியா இல்ல" என்கிறார் மும்தாஜ். 

"நீங்க எனக்காக பண்ணுவீங்கன்னு நினைக்கிறேன்" என்கிறார் ரித்விதா. 

ஆனால் மும்தாஜோ, "என் அம்மாவுக்காகவும் பண்ண மாட்டேன்" என்கிறார். அப்படியே ரித்விகாவின் முகம் சுருங்கிப் போகிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close