மும்தாஜின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் - பிக்பாஸ் ப்ரோமோ 2

  திஷா   | Last Modified : 06 Sep, 2018 01:34 pm
bigg-boss-promo-2

இன்று மும்தாஜை மையப் படுத்தித் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் போல. ஏற்கனவே அவருக்குக் கொடுத்த டாஸ்க்கை ஏற்க மறுத்து விட்டார். இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

மும்தாஜிடம் "நிறைய இடத்துல நிறைய நாட்கள் மத்தவங்களுக்காக யோசிக்கிறவங்க நீங்க" என ரித்விகா சொல்ல, "ஹெல்த் பிரச்னைகளைத் தாண்டி நிறைய விஷயம் இந்த பிக்பாஸ் வீட்ல பண்ணிருக்கீங்க" என்கிறார் யாஷிகா. 

"பிக்பாஸ் ரூல்ஸையே உடைச்சி ஒண்ணு பண்ணனும்ன்னா, அதெப்படி பண்ணுவ" என வழக்கம் போல புறம் பேசுகிறார் பாலாஜி. 

"இனிமேல் அன்பு அன்புன்னு அவங்களோட யுக்தி வேலைக்காகாது, இனி யார் கிட்டயும் போய் பக்கத்துல உட்கார முடியாது" என்கிறார் விஜய லட்சுமி. 

"அப்போ இவ்ளோ நாள் நீ இருந்தது ஃபேக்கு" என்கிறார் பாலாஜி. 

மும்தாஜின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இரவு நிகழ்ச்சியில் பார்க்கலாம். 

newstm.in  


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close