நீங்க தப்பா பேசுனாக்கூட நான் ஒண்ணும் சொல்லக் கூடாதா? - பிக்பாஸ் ப்ரோமோ 3

  திஷா   | Last Modified : 06 Sep, 2018 03:15 pm
bigg-boss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகி விட்டது. முன்பு மேகி நடத்திய சமையல் போட்டியில் சென்றாயன் வெற்றி பெற்றிருந்தார் அல்லவா, அதற்காக அவருக்கு பரிசு வழங்கப் பட்டிருப்பது போல் தெரிகிறது. 

ஓவர் எக்ஸைட்மெண்டுடன் பேச ஆரம்பிக்கும் சென்றாயன், "மும்தாஜ் மேடத்துக்கு ஒரு பெரிய நன்றிய சொல்லிக்கிறேன். மேடத்த பொறுத்தவரைக்கும் சென்றாயனுக்கு எதுவும் தெரியாது, தெரியாதுன்னு சொல்வாங்க. நானும் கத்துக்குறேன்னு கத்துக்கிட்டேன்" என சொல்ல வரும் சென்றாயனை வழி மறித்து, 

"கிடையாது, தப்பா பேசுறீங்க அண்ணா, நா என்னிக்கும் அப்படி சொன்னது இல்ல" என்கிறார் மும்தாஜ். 

"நான் தப்பா பேசுனேன்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா, ஐ அம் சாரி" என்கிறார் சென்றாயன். 

"தப்பா பேசலன்னா கூட நீங்க கோவிச்சிக்கிறீங்க, ஆனா நீங்க தப்பா பேசுனாக்கூட நான் ஒண்ணும் சொல்லக் கூடாதா? நீங்க என்ன வேணும்ன்னாலும் பேசுங்க. மஹத் பேசுன மாதிரி கூட நீங்க பேசிட்டு இருங்க, நான் கேட்டுட்டு இருக்கேன்" என்கிறார் மும்தாஜ். 

"எதுக்கு அந்த ஒரு வார்த்த சொன்னதுனால தான அவன் வெளில போய்ட்டான், நானும் வெளில போகனுமா?" என்கிறார் சென்றாயன். 

சென்றாயனுக்கு எதுவுமே தெரியாது என மும்தாஜ் சொல்லவில்லை, அவரிடம் ஹைஜீனிக் பிரச்னை இருப்பதாகத் தான் அவர் சொல்லியிருந்தார் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.   
newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close