விஜிக்கு பேசவே தெரியலை: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 07 Sep, 2018 10:05 am
biggboss-promo-1

பிக்பாஸில் இன்று மும்தாஜுக்கும் விஜயலட்சுமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடக்கிறது. 

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விட்டுக்கொடுக்கும் டாஸ்க் நடந்து வருகிறது. இதில் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மற்றவர்களுக்காக முடியை கத்தரித்து கொண்டனர். ஆனால் ரித்விகாவுக்காக மும்தாஜ் தனது முடியை பச்சை நிறத்தில் கலரிங் செய்து கொள்ள மறுத்துவிட்டார். 

இதனால் மற்ற போட்டியாளர்கள் அவர் மீது கோபத்தில் இருக்கின்றனர். குறிப்பாக விஜயலட்சுமி மும்தாஜ் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் மற்றவர்கள் மீது பாசமாக இருப்பது போல நடித்து முன்னேறி வருகிறார் என்பது போல நேற்று விஜயலட்சுமி பேசினார். 

இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில், விஜயலட்சுமிக்கும் மும்தாஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மும்தாஜ் ஸகிம்மரை ஆன்னில் வைத்து விட்டு சென்று விட்டார் என்று விஜயலட்சுமி குற்றம்சாட்டுகிறார். அதற்கு உங்களுக்கு என்ன பிரச்னை என்று மும்தாஜ் கேட்கிறார். அது தவறு என்று விஜயலட்சமி கூற, "ஓ.கே. தப்புனு நீங்க சொல்லிட்டீங்கல, அதை கேக்கிறதா இல்லயா என்பது இஷ்டம் தானே... நிறுத்துங்க" என மும்தாஜ் கூறுகிறார். 

தொடர்ந்து பேசும் விஜயலட்சுமி, "மத்தவங்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் போது நாம கரெக்டா இருக்கோமானு பார்க்கணும்" என்கிறார். 

அதற்கு, "நான் என்ன பண்ணணுமோ, அதை நான் பண்ணுவேன்... நீங்க என் அம்மா இல்லை" என பதில் அளிக்கிறார் மும்தாஜ். 

"ஒருத்தவங்க தப்புனு சொல்லும் போது, அத ஒத்துக்கோங்க. அதுக்கு மேல பொய் சொல்லாதிங்க" என விஜயலட்சுமி சொல்ல, "விஜி டோன்ட் டாக் டு மீ. ஏன்னா உங்களுக்கு பேச தெரியல" என மும்தாஜ் கூறுகிறார். 

உடனே "உங்களுக்கும்  அதே தான்!" என விஜி கூறுகிறார். 

மொத்தத்தில் இருவரும் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் பேசி சண்டை போடுகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close