ட்விட்டர்லயும் ட்ரால்லயும் புகைஞ்சா போதுமா? - பிக்பாஸ் ப்ரோமோ 1

  திஷா   | Last Modified : 08 Sep, 2018 02:20 pm
bigg-boss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வார நாட்களை விட வார இறுதியில் தான் இந்நிகழ்ச்சி சூடு பிடிக்கும். அதுவும் சனிக்கிழமை என்றால், நிறைய பஞ்சாயத்துக்கள் நடந்தேறும். அந்த வகையில் இப்போது வந்துள்ள ப்ரோமோவில், "நினைச்சதெல்லாம் நடக்கணும்ன்னா, அதுக்காக வேலை செய்யனும், சும்மா வாய்ச்சொல்லில் வீரரா இருந்தா போதாது. ட்விட்டர்லயும் ட்ரால்லயும் புகைஞ்சா போதுமா? 

அதெல்லாம் நானும் செஞ்சிருக்கேன், களத்துள இறங்கனும். ஓட்டுப் போடனும், ஓட்டு வாங்கனும். அப்படி வாங்கிட்டா, பதற்றவங்க பதறுவாங்க. அதை விட்டுட்டு, குத்துது, கொடையுது, வலிக்கிதுன்னு சொல்லிக் கிட்டு இருந்தா யார் பொறுப்பு? ராத்திரி 9 மணிக்குப் பாருங்க" என்கிறார் கமல். 

நிகழ்ச்சி முடிய இன்னும் 3 வாரங்களே இருப்பதால், அவசரமாக தனது அரசியலுக்கு இந்த மேடையைப் பயன்படுத்திக் கொள்கிறார் கமல், என்ற ரீதியில் இதற்குக் கமெண்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.  

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close