ஐஸ்வர்யா மீண்டும் காப்பாற்றப்பட்டார்; வெளியேறினார் சென்றாயன்!

  Newstm Desk   | Last Modified : 09 Sep, 2018 09:37 am
sendrayan-got-evicted-from-bb-house

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஸ்வர்யா இந்தவாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இருந்து குறைவான வாக்குகளை பெற்று சென்றாயன் வெளியேற்றப்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் நாம் எதிர்பார்க்காத நபர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார். கடந்த வாரங்களில் நாமினேஷனில் இருந்து தொடர்ந்து தப்பித்து வந்த ஐஸ்வர்யா இந்த வாரம் நாமினேட்டாகி இருந்தார். இதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் இருந்து சென்றாயன் வெளியேற்றப்படுகிறார். 

சென்றாயனுக்கு மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தும் அவர் வெளியேற்றப்படுகிறார். இதுகுறித்து கமல்ஹாசன் நேற்று சில விளக்கங்களை தெரிவித்தார்.கோடிக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தாலும், குறைவானோரே வாக்குகளை அளிக்கின்றனர். எனவே ஐஸ்வர்யா அதிக வாக்குகள் பெற்று நேற்று காப்பாற்றப்பட்டார். சென்றாயன் வெளியேற்றப்படுவதை விட, ஐஸ்வர்யா இந்த வாரமும் காப்பாற்றப்பட்டது தான்  ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close