கதறி அழும் ஐஸ்வர்யா; மும்தாஜை குத்தம் சொல்லும் விஜி: பிக்பாஸ் ப்ரோமோ 1, 2

  Newstm News Desk   | Last Modified : 09 Sep, 2018 12:54 pm

biggboss-promo-1-and-2

பிக்பாஸ் ப்ரோமோவில் இன்று நடக்கவிருக்கும் எவிக்‌ஷன் காட்சியில் மும்தாஜை மற்ற போட்டியாளர்கள் குற்றம் சொல்லும் காட்சிகளும், யாஷிக்காவிடம் எதையோ கூறி கதறி கதறி ஐஸ்வர்யா தத்தா அழும் காட்சிகளும் காட்டப்படுகின்றன. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சென்றாயன் வெளியேறுவார் என்று தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் எவிக்‌ஷன் காட்சிகள் காட்டப்படுகின்றனர். அதில், யார் வீட்டை விட்டு வெளியேற சரியான நபர் என்று கமல் கேட்கிறார். அதற்கு, "முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கிறார்" என்று விஜியும், "எந்த டாஸ்க்கையும் சரியாக செய்வதில்லை" என்று சென்றாயனும் மும்தாஜை பற்றி கூறுகின்றனர்.

பின்னர், யாரும்  எதிர்பார்க்காத விதத்தில் மக்கள் தீர்ப்பு அமைந்துள்ளதாக கமல் தெரிவிக்கிறார். 

அடுத்து வெளியான இரண்டாவது பிரோமோவில், யாஷிக்காவிடம் பேசிக்கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா கதறி கதறி அழுகிறார். நான் இது அல்ல, இந்த வீட்டில் என்னால் இதற்கு மேல் இருக்க முடியாது என்று ஐஸ்வர்யா கூறுகிறார். அவருக்கு மும்தாஜும் யாஷிக்காவும் ஆறுதல் கூறுகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close