பிக்பாஸை மதிக்கவே வேணாம்: ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 09:41 am
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன்கள் நடைபெறுகின்றன. 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் சென்றாயன் வீட்டில்இருந்து வெளியேற்றப்பட்டார். இதனைத்தொடர்ந்து இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன்கள் நடைபெறுகின்றன.  

தற்போது வீட்டில் மும்தாஜ், பாலாஜி, ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் உள்ளனர். இதில் இருந்து இருவரை அனைவரும் ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார். அப்போது விஜியை தேர்வு செய்கிறார் மும்தாஜ். அதற்கு, "நான் வைல்ட் கார்ட் என்பதால் என்னை வெளியேற்ற நினைப்பது ஏற்புடையதாக இல்லை" என்று விஜி கூறுகிறார். 

பின்னர் இதற்கு மும்தாஜ் விளக்கமளிக்கிறார். அவரிடம் "பிக்பாஸை மதிக்கவே வேணாமா?" என்று பாலாஜி கேட்கிறார். இவர்களுக்கு இடையே  வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போது பாதியில் பேசும் பிக்பாஸ், "இரண்டு பேரை தேர்வு செய்ய முடியாத காரணத்தால், தற்போது 3 பேரை நாமினேட் செய்ய வேண்டும்" என்று கூறிகிறார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close