பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வா: சென்றாயனை வரவேற்ற இயக்குநர்

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 12:36 pm
director-naveen-welcomes-sendrayan-after-he-got-evicted-from-bb-house

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சென்றாயனை வரவேற்கும் விதத்தில், "வாடா தம்பி சென்றாயா" என இயக்குநர் நவீன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று யாரும் எதிர்பார்க்காத விதத்தில் நடிகர் சென்றாயன் வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்டுத்தியது. மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை என்பதால் தான்  சென்றாயன் வெளியேற்றப்பட்டார் என்று கமல் விளக்கம் அளித்தார். எனினும் இந்த விளக்கத்தை பெரும்பாலான பிக்பாஸ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

 

— Naveen.M (@NaveenFilmmaker) September 9, 2018

 

இந்நிலையில் சென்றாயன் வெளியே வந்ததது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் இயக்குநர் நவீன்,"வாடா தம்பி சென்றாயா. வந்து பொழப்ப பாரு. பிக்பாஸ் எனும் மூடர்கூடத்திலிருந்து வெளியே வரும் சென்றாயனுக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார். இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தனதுமுதல் படமான மூடர்கூடம் படத்தில் சென்றாயனை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close