பழைய போட்டியாளர்களின் வருகை: பிக்பாஸ் ப்ரோமோ 2, 3

  Newstm Desk   | Last Modified : 10 Sep, 2018 02:27 pm

biggboss-promo-2-and-3

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று சென்ற சீசன் போட்டியாளர்களான காயத்திரி ரகுராம், வையாபுரி, சினேகன், சுஜா, ஆரத்தி ஆகியோர் வருகின்றனர். 

இன்றைய இரண்டாவது பிக்பாஸ் ப்ரோமோவில், வீட்டின் மெயின் டோர் திறக்கப்படுகிறது. அதனை போட்டியாளர்கள் ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அப்போது, கேட்டின் வெளியே இருந்து சீசன் 1 போட்டியாளர்கள் வீட்டிற்கு வருகின்றனர்.

சென்ற சீசனின் காயத்திரி ரகுராம், வையாபுரி, சினேகன், சுஜா, ஆரத்தி உள்ளே வர அவரை தற்போதைய போட்டியாளர்கள் வரவேற்கின்றனர். ஐஸ்வர்யாவிடம் பேசும் ஆரத்தி, "தமிழ்நாட்டின் மருமகளே" என்று கூறுகிறார். 

உண்மையில் ஆரத்தி அவரை கிண்டல் செய்கின்றார் என்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியாது. 

அடுத்ததாக வெளியாகி இருக்கும் பிக்பாஸ் ப்ரோமேவில், கமல் நேற்று இந்த வார நாமினேஷன் குறித்து கூறியது காட்டப்படுகிறது. இந்த வாரம் தான் நேரடியாக நாமினேட் செய்யப்பட்டதை அறிந்த ஐஸ்வர்யா முதலில் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். பின்னர், " நான் இந்த வாரம் நாமினேட் ஆக தயார். நீங்கள் மீண்டும் மக்களை சந்திக்க தயாரா?" என்று பாலாஜி கேட்டதும் "சரி" என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.  

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close