ஐஸ்வர்யா தப்பித்தது எப்படி? - போன சீஸனின் ஹவுஸ்மேட் காஜல் அதிர்ச்சி தகவல்

  திஷா   | Last Modified : 10 Sep, 2018 08:27 pm
bigg-boss-former-contestant-about-aishwarya-s-vote

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த எலிமினேஷன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் யாரும் மீளவில்லை. எப்போது ஐஸ்வர்யா நாமினேஷனுக்கு வருவார் எனக் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு, சென்ற வாரம் அந்த வாய்ப்பு கிடைத்தது. 

கிடைத்த கேப்பில் எல்லாம் ஐஸ்வர்யாவுக்கு எதிராக வாக்களித்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள், இந்த வாரம் நிச்சயம் ஐஸ்வர்யா பை பை சொல்வார் என நம்பினார்கள். பல இணையதள ஓட்டு முடிவுகளும் அதையே தெரிவித்தன. இதற்கிடையில் அவருக்குத்தான் அதிக ஓட்டு கிடைத்திருப்பதாக சொன்ன கமல், சென்றாயனை வீட்டை விட்டு வெளியேற்றினார். 

இந்நிலையில் இதைப் பற்றி கடந்த சீசனில், வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போன காஜல் பசுபதி, "பிக்பாஸ் ஒரு குழுவை வைத்து அவர்களே நிறைய ஓட்டுக்கள் போட்டிருக்கலாம். வாக்குகளை கையாள கணினியும் உள்ளது. நிச்சயம் இது மக்களிடம் இருந்து கிடைத்த சப்போர்ட் இல்லை" எனத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close