மும்தாஜுக்கு எதிராக சீசன் 1 போட்டியாளர்கள்: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 10:31 am
biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டிற்கு தற்போது சீசன் 1 போட்டியாளர்கள் வந்துள்ளனர். இன்றைய ப்ரோமோவில் இவர்கள் மும்தாஜுக்கு எதிராக செயல்படுவது போன்ற  காட்சிகள் காட்டப்படுகின்றன.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி இன்னும் இரண்டு வாரங்களில் முடிவடைய உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது, சீசன் ஒன் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சினேகன், காயத்திரி, ஆரத்தி, சுஜா, வையாபுரி ஆகியோரின் வருகையை அடுத்து தற்போதைய போட்டியாளர்கள் உற்சாகமாக இருக்கின்றனர். 

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், சீசன் ஒன் போட்டியாளர்கள் மும்தாஜுக்கு எதிராக செயல்படுவது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன. மும்தாஜின் உடல்நிலை காரணமாக அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகள் இந்த ஒரு வாரத்திற்கு இருக்க கூடாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். 
 

அதற்கு பதில் அளிக்கும் மும்தாஜ், "எனக்கு தேவையான பொருட்களை பிக்பாஸே திருப்பி தந்துவிடுவார். என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு தான் தலைவலி" என்று கூறுகிறார். 

ப்ரோமோவை பார்க்கும் போது, தற்போதைய போட்டியாளர்கள் மும்தாஜின் பக்கம் இருப்பது போல தான் தெரிகிறது. 

இதைப்படிச்சீங்களா: பாலிவுட்டுக்கு பல நிறங்கள் கொடுத்த 'அனுரக் கஷ்யப்'!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close