இது அன்பு காட்டும் போட்டி அல்ல: பிக்பாஸ் ப்ரோமோ 3

  Newstm Desk   | Last Modified : 11 Sep, 2018 01:21 pm
biggboss-promo-3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோவில் தற்போதைய போட்டியாளர்களை சில பழமொழிகளின் படி சென்ற சீசன் போட்டியாளர்கள் பிரிக்கின்றனர்.

சென்ற சீசன் போட்டியாளர்கள் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். குறிப்பாக வந்திருப்பவர்கள் அனைவரும் சண்டைகளுக்கு பேர் போனவர்கள். வந்த வேகத்தில் தனது வேலையை நேற்றே ஆரத்தி தொடங்கிவிட்டார்.

எனவே இந்த வாரம் முழுக்க பல சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம். இன்று வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பழமொழிகள் கொடுக்கப்படுகிறது. மும்தாஜுக்கு ஒரு பழமொழியை கொடுத்துவிட்டு, "வெறும் அன்பு செலுத்தும் போட்டி இது அல்ல. டாஸ்க்கையும் செய்யனும்" என்பது போல சீரியர்கள் கூறுகின்றனர். 

அடுத்ததாக, "பாம்பின் கால் பாம்பறியும், ஐஸ்வர்யாவை பற்றி யாஷிகாவுக்கு தான் தெரியும்" என்று யாஷிகாவுக்கு அந்த பழமொழி கொடுக்கப்படுகிறது. 

கடைசியாக  ஐஸ்வர்யாவுக்கு, "தவளை தன் வாயால் கெடும்" என்ற பழமொழி கொடுக்கப்படுகிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் மற்ற போட்டியாளர்கள், "நாங்க இதையெல்லாம் சொன்ன  சண்டைக்கு வருவாங்க" என்பது போல இருந்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close