கமல் சார் முன்னாடி இப்படி செய்யலாமா?- பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 12 Sep, 2018 10:09 am
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் குறித்து கவிஞர் சினேகன் பேசுகிறார். 

சீசன் ஒன் போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் சீசன் 2 வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வந்ததில் இருந்து ஏதாவது பிரச்னையை உருவாக்குவார்கள் என்று பார்த்தால், தற்போதையை போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுவதிலேயே அவர்கள் பிசியாக இருக்கின்றனர். 

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில், கவிஞர் சினேகன் போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் குறித்து பேசுகிறார். அகம் டி.வி வழியே கமல் பேசும் போது, சிலர் மரியாதை இல்லாமல் பேசுவதும் அவர் முன் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதும் தனக்கு வருத்தம் அளிப்பதாக சினேகன் கூறுகிறார். 

மேலும் அவர் பேசம் போது, "கமல் சார் உங்களிடம் காட்டமாக நடந்து கொண்டாலும். அகம் டிவி காட்சிகளுக்கு பிறகு நீங்கள் செய்த தவறுகளுக்காக மக்களிடம் அவர் வருந்தி பேசுவார்" என கூறுகிறார். இதனை கேட்டு மும்தாஜ் அழுதுவிட்டார். 

சினேகன் சீசன் ஒன் போட்டியாளர் என்பதை விட மக்கள் நீதி மய்யத்தின் பிரதிநிதியாக தான் வீட்டிற்குள் வந்திருக்கிறார் போல!

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close