இறுதி வாரத்திற்கு சென்றவர் யார்: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm News Desk   | Last Modified : 14 Sep, 2018 09:42 am

biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் இறுதிப்பகுதி தான் இன்றைய முதல் ப்ரோமோவில் காட்டப்படுகின்றன.

ஒரே டாஸ்கில் இறுதி வாரத்திற்கு முன்னேறிவிடலாம் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை சிறப்பாக செய்து வருகின்றன. நேற்றைய நிகழ்ச்சியில் தொடங்கிய இந்த டாஸ்க்கில் சிலர் வெளியேறிவிட்டனர். 

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில், விஜயலட்சுமி, யாஷிகா மற்றும் ஜனனி ஆகியோர் டாஸ்கை செய்கின்றனர். அதில் விஜி முதலில் வெளியேற்றப்படுகிறார். பின்னர் யாஷிகா மற்றும் ஜனனிக்கு இடையே போட்டி நடக்கிறது. 

பெரும்பாலும் உடல்ரீதியான டாஸ்க்கில் யாஷிகா தான் மற்ற போட்டியாளர்களை விடவும் அசத்துவார். ஆனால் இந்த டாஸ்கில் ஜனனி வெற்றி பெறுவது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close