மயங்கி விழுந்த யாஷிகா: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 12:32 pm

biggboss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் யாஷிகா மயங்கி விழுகிறார். அவரை மற்ற போட்டியாளர்கள் கன்பெஷன் அறைக்கு அழைத்து செல்கின்றனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதையடுத்து தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், கடைசியாக ஜனனி மற்றும் யாஷிகா மட்டுமே இருக்கின்றனர். இவர்களுள் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்று தெரிந்துவிடும்.

இந்நிலையில் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், சோர்வாக அமர்ந்திருக்கும் யாஷிகா திடீரென்று மயங்கி விழுகிறார். அவருக்கு மற்றவர்கள் முதல் உதவி செய்கின்றனர். 

பின்னர் யாஷிகாவை கன்பெஷன் அறைக்கு அழைத்து வரும் படி பிக்பாஸ் தெரிவிக்கிறார். இதே வாரத்தில் விஜயலட்சுமியும் இது போல மயங்கி விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.