ஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யவும் தயாராகிவிட்டார்கள்: இயக்குநர் திரு

  Newstm Desk   | Last Modified : 14 Sep, 2018 03:11 pm
director-thiru-tweet-on-biggboss

ஐஸ்வர்யாவை காப்பாற்ற கமலை டேமேஜ் செய்யவும் தயாராகிவிட்டார்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து இயக்குநர் திரு தெரிவித்துள்ளார். இவர் விஜயலட்சுமியின் மூத்த சகோதரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் சென்ற வார இறுதியில், ஐஸ்வர்யா சொன்ன பொய்கள் என்று கமல் பக்கம் பக்கமாக பேசினார். எனினும் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை. இதற்கு நீங்கள் தான் காரணம் பார்வையாளர்களை பழிக்கூறினார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பொய்கள் என கமல் கூறியதில் பல தவறான தகவல்கள் என கடந்த சில நாட்களாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. 

அதற்கான வேலைகளை பிக்பாஸே செய்து வருகிறார். சீசன் ஒன் போட்டியாளர்கள் முன்பு வீட்டில் நடந்த காரச்சார விஷயங்கள் குறித்த குறும்படத்தை அவ்வபோது போடுகின்றனர். இதுபோன்ற ஒரு படத்தில் தான் கமல் கூறிய தகவல்கள் தவறானவை என்பது தெரியவந்தது. 

 

 

இதனால் கமல் சரியாக பஞ்சாயத்து செய்வதில்லையோ, அவர் நிகழ்ச்சியை முழுதாக பார்ப்பதில்லை போன்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் திருவிளையாடல் ஆரம்பம், தீராத விளையாட்டுபிள்ளை, சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் திரு, "ஐஸ்வர்யாவை காப்பாற்ற, இவர்கள் கமலின் இமேஜை டேமேஜ் செய்ய கூட தயங்குவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

இவர் தற்போது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்திருக்கும் விஜயலட்சுமியின் மூத்த சகோதரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close