பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் மும்தாஜ்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 09:07 am
mumtaz-evicted-from-biggboss-house

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரமாவது ஐஸ்வர்யா தத்தா வெளியேற்றப்படுவார் என்று பார்வையாளர்கள் நினைத்திருக்க, அதற்கு மாறாக நடிகை மும்தாஜ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்கடாக வெளியேறி உள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம், சென்ற சீசன் போட்டியாளர்களின் வருகையால் எந்த சண்டைகளும் இன்றி சென்றது. ஆனால் இந்த வாரம் யார் எவிக்டாகி வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு மட்டும் மக்களிடம் உள்ளது. 

சென்ற வாரம் நடந்த விட்டுக்கொடுக்கும் டாஸ்க்கில் மும்தாஜை டாஸ்க் செய்ய வைக்காததால் ரித்விகா நேரடியாக நாமினேட் செய்யப்பட்டார்.இதனையடுத்து ஐஸ்வர்யா, மும்தாஜ், விஜயலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். 

இந்நிலையில் ரித்விகா சேஃப்பாகி விட்டார் என்பதை கமல் நேற்று அறிவித்தார். மீதம் உள்ளவர்களில் மும்தாஜ் தான் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறுகிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. 

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு வந்த இவர், தற்போது வெளியேறியிருக்கிறார். எனவே இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close