பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்!

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 01:23 pm
sreeshanth-in-biggboss-hindi

நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 12வது சீசனில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஶ்ரீசாந்த் பங்கேற்கிறார்.  

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்  ஶ்ரீசாந்த் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சூதாட்ட புகாரில் சிக்கி சில நாட்கள் சிறைவாசமும் அனுபவித்ததுடன், வாழ்நாள் தடையும் பெற்றார்.

கிரிக்கெட்டில் தொடர் பிரச்னைகளை சந்தித்த வரும் இவர, சினிமா பக்கம் நகர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட முடியாமல் போனாலும், தனது எதிர்காலத்தை இப்போது சினிமா மூலம் வடிவமைத்து வருகிறார். ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த டீம் 5 படம் தமிழ், மலையாளத்தில் வெளியானது. இதேபோல் அக்சர் 2 உள்ளிட்ட இந்திப் படங்களிலும் நடித்துள்ளார். சினிமா மட்டும் அல்லாமல் பா.ஜ.கவில் இணைந்து  கேரளாவில் சட்டசபை தேர்தலில் போட்டியில் தோல்வியடைந்தார்.  

தற்போது தொலைக்காட்சியிலும் முகம் காட்ட முடிவு செய்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதன் 12வது சீசனின் தொடக்க விழா நேற்று நடந்தது. இதில் கடைசி போட்டியாளராக ஸ்ரீசாந்த் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமைதியான ஒருவர் சென்றார் என்றாலே வெளியே வரும் போது ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் தான் வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஶ்ரீசாந்த் வீட்டிற்குள் சென்றுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close