யாஷிகாவின் சேலையை கிழிக்கும் விஜி: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 17 Sep, 2018 01:25 pm
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதை அடுத்து, இன்று வெளியாகி உள்ள 2வது ப்ரோமோவில் யாஷிகா அணிந்திருக்கும் புடவையை விஜயலட்சுமி கத்தரிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. 

இதில் யாஷிகா தலையில் அழுக்கு நீரை ஊற்றியுள்ளனர். மேலும் அவர் மீது பெப்பரை தூவ விஜயலட்சுமி திட்டமிடுகிறார். மேலும் ஒருவரது பலவீனத்தை யோசித்து விளையாட வேண்டும் என்று அவர் கூறுகிறார். 

பின்னர் யாஷிகா அணிந்திருக்கும் புடவையை அவர் கத்தரிக்கிறார். இதனை பார்த்து ஐஸ்வர்யா கோபமாகிறார். இதே போன்று ஒரு காரியத்தை ஐஸ்வர்யா செய்யும் போது பார்வையாளர்களின் கோபத்துக்கு ஆளானார். தற்போது விஜியும் இதையே செய்கிறார் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close