ஐஸ்வர்யாவை வச்சி செய்யும் விஜி - பிக்பாஸ் ப்ரோமோ 1&2

  திஷா   | Last Modified : 18 Sep, 2018 01:11 pm

bigg-boss-promo-1-2

இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இன்று வந்துள்ள முதல் ப்ரோமோவில், ஐஸ்வர்யாவின் கையில் எண்ணெய் ஊற்றுகிறார்கள். "பருப்பு பாக்கெட் ரெண்டு மூணு எடுத்து கைல கட்டிடலாம். கை ஆடும் போது, முகத்துல தண்ணி ஊத்தலாம்" என ஜனனியிடம் சொல்கிறார் விஜி. 

நேற்றைய தினம் யாஷிக்காவை காப்பாற்றிய ஐஸ்வர்யாவுக்கு இப்படி வித விதமான டார்ச்சரைக் கொடுத்து, இம்சை செய்துகொண்டிருக்கிறார்கள் மீதமுள்ள ஹவுஸ்மேட்ஸ். இதில் அதிக முனைப்பு காட்டுவது விஜய லட்சுமி தான். 

அடுத்ததாக வந்துள்ள இரண்டாவது ப்ரோமோவில், 'இது ரொம்ப வலி, பிஸிக்கல் டார்ச்சர்' என ஐஸ்வர்யா அழுகிறார். 'நான் அழுது சீன் போடலங்கறதுக்காக எனக்கு ஒண்ணுன் ஆகலன்னு அர்த்தம் இல்ல' என பாலாஜியிடம் சொல்கிறார் விஜி. 

'நான் பாய்ண்டுக்காக கேக்கல, இது என் உடம்பு' என்றவாறு தொடர்ந்து அழுகிறார் ஐஸ்வர்யா. 

'அவங்களுக்கு மட்டும் தான் உடம்பு இருக்கா?, மிளகாய் தூள் போட்டு கண்ண என்னால திறக்க முடியல, உங்கள யாரும் கழுத்தைப் பிடிச்சி, பண்ணனும்ன்னு சொல்லல, வலிச்சிருந்த அப்போவே விட்ருக்கலாமே' என மறுபுறம் சொல்கிறார் விஜய லட்சுமி. 

என்ன நடந்ததென இரவு பார்ப்போம். 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close