செக்க சிவந்த வானம் படத்தின் கள்ள களவாணி பாடல் வெளியீடு

  திஷா   | Last Modified : 19 Sep, 2018 04:41 am
ccv-s-kalla-kalavani-song-released

இயக்குநர் மணிரத்னம் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. இதில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, தியாகராஜன், ஜெயசுதா என பலரும் நடித்திருக்கிறார்கள். 

படத்திற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணிபுரிந்துள்ளார். 

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து இதனை லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'கள்ள களவாணி' என்ற பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு டயானா இருவருக்குமான இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஏற்கனவே இந்தப் படத்தின் 'மழைக்குருவி', 'பூமி பூமி' ஆகியப் பாடல்கள் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத் தக்கது. 
newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close