யாஷிகாவா... ஜனனியா... முதல் இடம் யாருக்கும்: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 19 Sep, 2018 12:54 pm
biggboss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் பிக்பாஸ் ரேங்கிங் வழங்கப்படுகிறது. இதில் முதல் இடம் பிடிப்பதற்கு யாஷிகாவுக்கும் ஜனனிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 

இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், பிக்பாஸ் ரேங்கிங் படி போட்டியாளர்கள் பிரிக்கப்படுகின்றனர். இதில் யாருக்கு முதல் இடம் என்பதில் ஜனனிக்கும், யாஷிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில், "குட்டியாக இருந்தாலும்... யாருக்கும் குறைந்தவள் இல்லை" என்று ஜனனி தனது தரப்பு வாதத்தை கூறுகிறார். பின்னர் பேசும் யாஷிகா, "நான் தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறேன். ஒரு டாஸ்க்கை வைத்து நீங்கள் தான் சிறந்தவர் என முடிவு செய்ய முடியாது. முதல் இடத்திற்கு நான் தான் சரியான ஆள்" என கூறுகிறார்.

இந்த வாக்குவாதத்தின் போது ஜனனி அந்த இடத்தில் இருந்து சென்று விடுகிறார். டாஸ்க்கை சரியாக விளையாடுவது என்று பார்த்தால் யாஷிகா தான் முதல் இடத்திற்கு சரியானவர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close