நான் இப்படி தான் பண்ணுவேன்!- பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 20 Sep, 2018 11:09 am
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோவில், வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

90 நாட்களை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. இறுதிக்கட்டம் என்பதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இன்று வெளியாக இருக்கும் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் டாஸ்க் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது விஜயலட்சுமி தவறி கீழே விழுகிறார். 

மற்றவர்கள் அவருக்கு உதவும் நேரம் பார்த்து ஐஸ்வர்யா எதிரணியை தோற்கடிக்க முயற்சிக்கிறார். அதனை பார்க்கும் ஜனனி, கோவத்தில், "இந்த நேரத்துல கூட வின் பண்ணணுமா. எல்லாத்தையும எடுத்துக்கோ" என்று கத்துகிறார். 

இது டாஸ்க் என்று ஐஸ்வர்யா கூற, "இதெல்லாம் நியாயமான சண்டை இல்ல" என்பது போல ரித்விகா கூறுகிறார். அதற்கு "நான் இப்படி தான் விளையாடுவேன்'' என்று ஐஸ்வர்யா கூறுகிறார். நாளுக்கு நாள் ஐஸ்வர்யாவுக்கு இருந்த யாஷிகாவின் ஆதரவும் குறைந்துக் கொண்டே வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close