மீண்டும் மரத்தில் ஏறிய வேதாளமாக ஐஸ்வர்யா: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 21 Sep, 2018 09:39 am
biggboss-promo-1

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில், ஐஸ்வர்யா மீண்டும் மற்ற போட்டியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மண்ணவாசனை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மாவு மிஷனில் இருக்கும் கோலமாவை போட்டியாளர்கள் காப்பாற்ற வேண்டும். தொடங்கியது முதலே இந்த டாஸ்க் கலவரமாக தான் நடந்து வந்தது. நேற்று போட்டியாளர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதால் டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று இந்த டாஸ்க் மீண்டும் தொடங்கப்படுகிறது. இதில் மற்றப் போட்டியாளர்கள் தன்னை தொடர்ந்து குற்றம் சொல்வதால் கடுப்பாகும் ஐஸ்வர்யா, ஜனனியின் மாவு இயந்திரத்தை தள்ளிவிட்டு உடைக்கிறார். 

ஜனனியும் ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்பட்ட இயந்திரத்தை தள்ளிவிடுகிறார். இப்படி செய்யாதீர்கள் என்று விஜயலட்சுமி கத்துகிறார். நான் இப்படி தான் செய்வேன் என்று கோபமாக கூறுகிறார் ஐஸ்வர்யா. இந்த டாஸ்க் முடிவதற்குள் சென்றாயன் சொன்னது போல ரத்த ஆறே ஓடும் போல...

இதைப்படிச்சீங்களா: ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படமான வெளிவரும்“தி அயர் லேடி”

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close