பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுகிறார் யாஷிகா!

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 09:29 am
yaashika-got-eliminated

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று யாஷிகா ஆனாந்த் வெளியேற்றப்படுகிறார். 

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இரண்டு எவிக்‌ஷன்கள் நடத்தப்படும் என்று கமல் முன்னரே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் ஜனனியை தவிர மற்ற அனைவரும் எவிக்‌ஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இன்றைய நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட யாஷிகா வெளியேற்றப்படுகிறார். மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் யாஷிகா ஆனந்த்  வெளியேற்றப்படுவது பார்வையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக... இந்த வாரமும் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டுள்ளார்.

மேலும் இந்த முறை டைட்டல் வின்னராக நிச்சயமாக பெண் தான் இருப்பார்என்பதும் உறுதியாகி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close