யாஷிகா கனவில் வந்த கமல்ஹாசன்: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 23 Sep, 2018 12:40 pm
biggboss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், எவிக்‌ஷன் படலம் காட்டப்படுகிறது. இதில் ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் எவிக்‌ஷன் குறித்து கமலிடம் பேசுகின்றனர். அப்போது கமல் தனது கனவில் வந்ததாக யாஷிகா கூறுகிறார்.

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது எவிக்‌ஷன் நடக்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கின்ற 2வது ப்ரோமோவில், ஒவ்வொரு போட்டியாளர்களும் எவிக்‌ஷன் குறித்து பேசுகின்றனர். 

முதலில் பேசும் விஜயலட்சுமி, "வைல்ட் கார்ட் என்னும் காரணத்திற்காக நான் ஃபைனல்சுக்கு போக கூடாது என்று அவர்களும் நினைத்தால், நான் அங்கு வந்துவிடுகிறேன்" என்றார். 

இத்தனை நாள் இருந்த அதே தைரியத்துடன் தான் இப்போதும்  இருப்பதாக ரித்விகா கூறினார். பின்னர் பேசிய யாஷிகா, கமல் தனது கனவில் வந்ததாகவும், ஃபைனல்சுக்கு வா என்று அழைத்ததாக கூறினார். 

பின்னர் பார்வையாளர்களில் இருந்து ஒருவரை மேடைக்கு அழைக்கும் கமல், அவரையே யார் எவிக்டாகிறார் என்பதை அறிவிக்குமாறு கூறுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close