இன்னைக்கும் எலிமினேஷன் இருக்கா? - பிக்பாஸ் ப்ரோமோ

  திஷா   | Last Modified : 24 Sep, 2018 01:10 pm
bigg-boss-promo

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த இந்நிகழ்ச்சி இன்று முதல் 9.30-க்கு தொடங்கும் எனத் தெரிகிறது. இது சம்பந்தமான ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள் சானல் தரப்பில். 

அடுத்ததாக வெளியாகியுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவில், "சந்திரமுகி படத்தில் வரும் சந்திரமுகியின் வசனத்தைப் பேசி நடிக்கிறார் ரித்விகா. பிக்பாஸ் டாஸ்க்குன்னா என்னன்னு நெனச்சிட்டீங்க என அதே டோனில் விஜியைப் பார்த்துக் கேட்கிறார். வடிவேலு போல நடிக்க விஜி முயற்சி செய்கிறார். 

ஜனனி அவர் பங்குக்கு கையை ஓங்கி ஓங்கி ஏதோ செய்கிறார். ஆனால் இவர்கள் அனைவரையும் விட, ஐஸ்வர்யா கீழே விழுந்து ஒரு நடிப்பு நடிக்கிறார் பாருங்கள், அப்படியொரு நடிப்பு. 

தவிர, ரம்யா மற்றும் வைஷ்ணவியும் வீட்டினுள் இருக்கிறார்கள். 

அடுத்ததாக வெளியாகியுள்ள இன்னொரு ப்ரோமோவில், இன்னிக்கும் ஒரு எவிக்‌ஷன் இருக்கிறது என்கிறார் ரம்யா. ஒருவேளை நான் எவிக்ட் ஆனால் நீங்க மூணு பேரும் ஃபைனலிஸ்டா இருப்பீங்க, என்கிறார் ஜனனி. இவங்க கூட சண்டைப் போட்டு நான் வெளில போனானும், நான் சந்தோஷம் தான் படுவேன் என்கிறார் ரித்விகா. 

எவிக்‌ஷன் கார்டை எடுத்துப் பார்த்த வைஷ்ணவி, பெருமூச்சு விடுகிறார். இது உண்மையா அல்லது, அங்கிருப்பவர்களை பயமுறுத்தவா என்பதை இன்று இரவு நிகழ்ச்சியில் பார்க்கலாம்.  

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close