ஏம்மா இப்ப வந்து துள்ற: பிக்பாஸ் ப்ரோமோ 2

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 12:49 pm
biggboss-promo-2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், வீட்டில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை போட்டியாளர்கள் மீண்டும் செய்து காட்டுகின்றனர். அப்போது அவர்கள் மற்றவர்களை போல நடிக்கின்றனர். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் 4 நாட்களில் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் தற்போது வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்கு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் பாலாஜியும், யாஷிகாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், வீட்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்து போட்டியாளர்கள் நடித்து காட்டுகின்றனர்.

முதலாவதாக மும்தாஜ் பேசும் போது ஜனனி காதை முடிக்கொண்டு சென்றதை நடித்து காட்டுகின்றனர். இதில் மும்தாஜாக விஜயலட்சுமியும், ஜனனியாக ஐஸ்வர்யாவும் நடிக்கின்றனர்.

பின்னர் பாலாஜி மீது குப்பை கொட்டிய காட்சியை நடித்து காட்டுகின்றனர். இதில் பாலாஜியாக ரித்விகா நடிக்கிறார். மும்தாஜாக ஐஸ்வர்யா நடிக்கிறார். அப்போது ரித்விகா மீது குப்பை கொட்டிய பிறகு ஐஸ்வர்யா பதறுகிறார். அதற்கு, "கொட்ற வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது ஏன்மா துள்ற" என்று ரித்விகா கேட்கிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close