வெளில உங்களுக்கு நல்ல பேரு இருக்கு: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 10:28 am
biggboss-promo-1

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று நுழையும் சென்றாயன், வீட்டில் இருப்பவர்களுக்கு மக்களிடையே நல்ல பெயர் இருப்பதாக கூறுகிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இந்த வாரத்தோடு முடிவடைகிறது. இந்நிலையில் இந்த வாரம் முழுக்க கடந்த வாரங்களில் எவிக்டாகி வெளியேறியவர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்கு வந்து செல்கின்றனர். அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியில் சென்றாயன் வீட்டிற்கு வருகிறார். 

அவர் தற்போது இருக்கும் போட்டியாளர்களிடம், "வெளியே உங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. குறிப்பாக ஐஸ்வர்யா நீங்கள் கவலைப்படவே வேண்டாம். விருது வாங்க வேண்டும் என்றில்லை நீங்கள் அனைவரும் வெற்றியாளர் தான்" என்று கூறுகிறார். 

இதனைக் கேட்டதும் சந்தோஷத்தில் ரித்விகாவை கட்டியணைத்து  ஐஸ்வர்யா அழுகிறார்.

கடந்த நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் வருபவர்கள் அனைவரும் இதையே தான் கூறுகிறார். அப்படியெனில், சமூக வலைதளங்களில் மீம்ஸ் போடுபவர்கள் எல்லாம் யாராக இருக்கும்...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close