பிக் பாஸ் பட்டத்தை வென்றார் ரித்விகா!

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 12:27 pm
riythvika-wins-bigg-boss-season-2-title

சர்ச்சையும், சுவாரஸ்யமும் கலந்த பிக் பாஸ் சீசன் 2-வில், எஞ்சியிருந்த விஜயலக்ஷ்மி, ரித்விகா, ஐஸ்வர்யா ஆகிய மூவரில் வெற்றியாளராக, ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜய் டிவியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒரு வழியாக நேற்று இரவு முடிவுக்கு வந்தது. கடைசியாக எஞ்சியிருந்த 4 போட்டியாளர்களில், ஜனனி சனிக்கிழமை வெளியேற்றப்பட்டார். அவரை தொடர்ந்து, ஐஸ்வர்யா, ரித்விகா மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் போட்டியில் இருந்தனர். 

கடைசி நாளான நேற்று, நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் வழக்கம் போல துவக்கி வைத்தார். மூவரில் முதல் போட்டியாளரை எலிமினேட் செய்ய, பிக் பாஸ் சீசன் 1-ன் வெற்றியாளர் ஆரவ் வரவழைக்கப்பட்டார். அவர் விஜயலக்ஷ்மியை அழைத்து வந்து எலிமினேட் ஆனதாக உறுதி செய்தார். அதன்பின், முதல் சீசனில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஓவியா வந்தார். ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொன்ன ஓவியா, இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்க்கவே இல்லை என கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். 

தொடர்ந்து வெற்றியாளரை அழைத்து வர கமல் உள்ளே சென்றார். ரித்விகா மற்றும் ஐஸ்வர்யாவை வெளியே அழைத்து வந்து, ரித்விகா வெற்றி பெற்றதாக கமல் தெரிவித்தார். இதைக் கேட்ட ரித்விகா கண்ணீருடன் துள்ளி குதித்து கொண்டாடினார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close