எந்த தோற்றத்தில் இருந்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள்: பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 01:20 pm
i-want-to-be-an-inspiration-biggboss-winner-riythvika

நீங்கள் எந்த தோற்றத்தில் இருந்தாலும் நம்பிக்கையுடன் இருங்கள் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட ரித்விகா கூறினார். 

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது பாகம் நேற்றோடு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தில் ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருந்தனர். இவர்களுள் ரித்விகா 1 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். 

மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்த ரித்விகா வெற்றிக்கு பின் பேசும் போது, தன்னை போன்ற பல பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாக கூறினார். மேலும், "அனைவரும் உங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். அனைவருக்கும் நன்றி. இது எல்லோருடைய வெற்றி. போட்டியோ வாழ்க்கையோ எதை நினைத்தும் பயப்படாதீரக்ள். நீங்கள் எந்த தோற்றத்தில் இருந்தாலும் நம்பிக்கையோடு இருங்கள். ஆரோக்கியமாக போட்டியிடுங்கள்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close