வாழ்க்கை நல்லா இருக்கும் என நினைக்கிறேன்: கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா தத்தா

  Newstm Desk   | Last Modified : 01 Oct, 2018 02:39 pm

aishwarya-dutta-tweet-after-coming-out-from-biggboss-house

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளராக தேர்வான ஐஸ்வர்யா தத்தா, வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் கொண்டாட்டத்தில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. நடிகை ரித்விகா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது வெற்றியாளராக ஐஸ்வர்யா தத்தா தேர்வானார். 

 

— Aishwarya Dutta (@AishwaryaaDutta) September 30, 2018

 

 

105 நாட்களுக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ரித்விகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஒரு வீடியோவில் அவர் கொண்டாட்டமாக ஆடுகிறார். அதில், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாக பதிவிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close