பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 04 Oct, 2018 10:14 am
aishwarya-posted-video-apologises-and-thanks-fans

பிக்பாஸ் தமிழ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளரான ஐஸ்வர்யா தத்தா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

தனியார் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த வாரத்தோடு முடிவடைந்தது. நடிகை ரித்விகா அதிக வாக்குகள் பெற்று வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது வெற்றியாளராக ஐஸ்வர்யா தத்தா தேர்வானார். 

இந்த நிகழ்ச்சியில் நடந்த சர்சசைகளுக்கு காரணமாக இருந்த ஐஸ்வர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்கள் என் மீது காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால் நன்றி என்பது மிகவும் சின்ன வார்த்தை. பிக்பாஸ் வீட்டில் நான் மற்றவர்களை வருத்தப்படுத்தி இருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் யாரையும் வேண்டுமென்றே காயப்படுத்தவில்லை. 

 

 

விரைவில் திரையில் என்னை பார்ப்பீர்கள். கடந்த 6 வருடங்களாக தமிழ்நாட்டில் நான் நிறைய கடினமான நாட்களை கடந்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இவ்வளவு ரசிகர்களை பெறுவேன் என்று எனக்கு தெரியாது. அனைவருக்கும் நன்றி" என கூறினார். 

 

 

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலங்கள் சிலர் சிம்புவோடு செக்க சிவந்த வானம் படத்தை பார்த்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close