பிக்பாஸ் வீட்டில் சண்டை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஶ்ரீசாந்த்

  Newstm Desk   | Last Modified : 04 Dec, 2018 09:37 am
sreesanth-back-in-bigg-boss-12-house-after-being-briefly-hospitalised

பிக்பாஸ் இந்தியின் 12வது சீசனில் வீட்டில் உள்ள பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஶ்ரீசாந்த் தலையில் முட்டிக்கொண்டார். இதானல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்பி உள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது இந்தி பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்று வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீசாந்த்  சுர்பி என்பவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.

பாத்ரூம் சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார், அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி ட்விட்டரில்பதிவிட்டுள்ளார். பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என பிக்பாஸ் டீம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க தற்போது வந்துள்ள புதிய டீசரில் ஸ்ரீசாந்த் அவரை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close