பிக்பாஸ் 3 - இல் இவர் பங்கேற்றால் கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது !

  கண்மணி   | Last Modified : 15 Jun, 2019 01:32 pm
she-is-a-participant-of-bigg-boss-3

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில், கடந்த 2017 -ஆம் ஆண்டு தொடங்கி பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முக்கிய சுவாரஸ்யமே நடிகர் கமல் தொகுப்பாளராக களம் இறங்கியதுதான். "ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது" என துவங்கிய பிக்பாஸ், 15 போட்டியாளர்கள்...100 நாட்கள் என பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. முதல் சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். அடுத்த சீசனில் தமிழ் பெண்ணான ரித்விகா வெற்றி வாகை சூடினார்.

இதில் வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதோடு இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருமே தங்களது ஒரிஜினாலிட்டி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததுடன், சினிமா துறையில் சிறந்த  வாய்ப்பையும் பெற்றனர். இந்நிலையில் இரண்டு சீசனின் வெற்றியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் - 3, வரும் 23 -ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீசனில் பங்கு பெறப்போகும் போட்டியாளர்கள் குறித்த தகவலை அறிய ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், நடிகை ஜாங்கிரி மதுமிதா, சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி, தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் திருநங்கை அப்சரா ரெட்டி , நடிகை லைலா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தகவல் பரவி வந்தது. இந்த தகவல் பொய்யானது என லைலா, ரமேஷ் திலக், அப்சரா ரெட்டி ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், கலகலப்புக்கு பஞ்சமில்லாத விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான  பிரியங்கா பிக்பாஸ் 3 -இல் பங்கேற்பார் என தெரிகிறது. சமீபத்தில் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த புகைப்படமும் இந்த கருத்தையே வெளிப்படுத்துவதாக தோன்றுகிறது. அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில், பிக்பாஸ் சீசன் 3 க்காக அமைக்கப்பட்டுள்ள செட்டில் பிரியங்கா இருக்கிறார்.

A post shared by priynaka vj (@priyanka.vijaytv) on

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close