பிக் பாஸ் வீட்டில் திகிலூட்டும் சிறைச்சாலை!

  கண்மணி   | Last Modified : 15 Jun, 2019 01:33 pm
a-newly-setup-jail-bigg-boss-tamil-season-3

பிக் பாஸ் இந்தி ஸ்டார் சேனலில் பிரபலமான பிக்பாஸ் சீரிஸைத் தொடர்ந்து தமிழிலும் பிக்பாஸ் ஷோ ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஷோவின் மூலம் திரையில் காணும் நடிகர்களுக்கும், அவர்களது ஒரிஜினல் குணத்திற்குமான வேறுபாடு மிக அதிகமாகவே வெளிக்காட்டப்பட்டது. பிக்பாஸ் 100 நாட்கள் போட்டியின் மூலம் தங்களது  உண்மை முகத்தை வெளிகாட்டிய பிரபலங்கள் இன்று நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிட்டனர் என்றே சொல்லலாம்.  இது ஒரு 'ரியாலிட்டி ஷோ' என்பதையும் மறந்து அதில் பங்கு பெற்ற பிரபலங்களை தங்களுக்கு நெருக்கமானவர்கள் என உணரும் அளவிற்கு பிக்பாஸ் பலரின் வீடுகளில் இடம் பிடித்தது.

நட்பு, காதல், கோபம், பொறாமை, பாசம், அழுகை என ஒரு குடும்ப நிகழ்வாக நடந்து முடிந்த  பிக்பாஸ் இரண்டு சீசனை தொடர்ந்து மூன்றாவது சீசனும் ரெடியாகி விட்டது. வரும் ஜூன்23ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் 3 குறித்த சுவாரஸ்ய திகில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  போன சீசன் போலவே இந்த சீசனிலும் ஜெயில் செட்டப் போடப்பட்டுள்ளதாம்.

ஆனால், இந்த ஜெயில் முற்றிலும் மாறுபட்டதாம். அதாவது பாதாள சிறையாம். சென்ற சீசனில் பிக்பாஸ் நடைமுறையை பின்பற்றாதவர்கள் ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அந்த ஜெயில், பிக்பாஸ் வீட்டிற்கு அருகில் மற்ற பங்கேற்பாளர்களுடன் உரையாடும் வகையில் அமைந்திருந்தது.

ஆனால், இந்த செட் அவ்வாறு அமைக்கப்படாமல் முற்றிலும் தனிமைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாம்.  இதுபோன்ற பாதாள சிறைச்சாலை ஏற்கனவே இந்தி பிக்பாஸில் பிரபலமடைந்தது. அதைத்தொடர்ந்து தமிழில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ்3 லும் இந்த ஜெயில் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close