பிக் பாஸ் - 3ல்  ஹன்சிகாவை காதலிக்கும் மன்னை சாதிக்கின் என்ட்ரி எப்படி தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 16 Jun, 2019 03:42 pm
actor-mannai-sathik-in-bigg-boss-tamil-3

விஜய் டிவியில் கடந்த 2017 ம் ஆண்டு தொடங்கி பிரபலமடைந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.  நடிப்பு அரசியல் என மிகவும் பிஸியாக இருக்கும் கமலஹாசன் தொகுப்பளராக களம் இறங்கிய முதல்னிகழ்ச்சியான இதில் பெரும்பாலும் அரசியள் பேசப்பட்டது என்றே சொல்லலாம். சீசன் 3யை நெருங்கியுள்ள பிக் பாஸ் குறித்த தகவலக்ளை ரகசியமாக வைத்துள்ளது விஜய் டிவி.

கடந்த இரண்டு சீசன்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு உள்ளாகும், பெரும்பாலானோரால் வசைபாடப்படும் நபர்களே பங்கேற்பாளர்களாக இருந்தார்கள் என்றே சொல்லலாம். இந்த சீசனில் பங்கேற்கப்போகும் பிரபலங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அவ்வப்போது இந்த பிரபலம் பிக்பாஸ்- 3ல்  பங்கேற்கிறார் என்கிற தகவல் கசிந்த வண்ணம் தான் உள்ளது. அதன்படி, ஏற்கனவே மதுமிதா, ப்ரியங்கா, ஸ்ரீரெட்டி ஆகியோர் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது.

பங்கேற்பாளர்களை, பிரபலங்களில் ஒருவராக மாற்றிய பிக்பஸ் ரியாலிட்டி ஷோவில் இணையதள பிரபலம் மன்னை சாதிக் பங்கேற்க போகிறார் என தெரியவந்துள்ளது. இவர் ஹன்சிகாவை காதலிப்பதாக வீடியோ வெளியிட்டு பிரபலமானவர். தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் மன்னை சாதிக், சமீபத்தில் திரைக்கு வந்த 'நட்பே துணை' திரைப்படத்தில் துணை நடிகராக நடித்திருந்தார். இவர் தன் கைவசம் சில படங்களை வைத்திருப்பதால் பிக்பாஸ்- 3ல் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுப்பார் என தெரிகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close