பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் போனது யாருனு ஞாபகம் இருக்கா? இந்த சீசன்ல கமல் என்ன சொல்லப்போறாரு?

  கண்மணி   | Last Modified : 15 Jun, 2019 06:36 pm
biggboss-review

இந்தி பிரபலங்களுடன் 100 நாட்கள் சவாலுடன் வெற்றி பெற்ற நிகழ்ச்சி தான் 'பிக் பாஸ்' சீரிஸ்.  இந்த நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் டெலிவிஷன் தமிழிலும் ஒளிபரப்ப முடிவு செய்து கடந்த 2017ம் ஆண்டு இந்த நிகழ்ச்சிய ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. இந்தியில் பிரபல ஸ்டார்களை தொகுப்பாளர்களாக வைத்து நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் யார் தொகுத்து வழங்க போறாங்க? என்கிற கேள்வி இந்தி பிக்பாஸ் பத்தி தெரிச்சவங்க மத்தியில மேலோங்கி இருந்த நேரத்துல, யாருமோ யூகிக்காத வண்ணம் முதல் முறையா சின்னத்திரை நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தமானார் கமல்ஹாசன்.

சரி தொகுப்பாளர் ரெடி, பிக்பாஸ்ன என்ன? அந்த நிகழ்ச்சியில என்ன போட்டி நடத்துவாங்கனு மக்கள் மத்தியில கேள்வி எழுந்த போது, இந்த நிகழ்ச்சி பத்தி எப்படி மக்கள் மத்தியில புரிய வைச்சு , பிரபலமாக்க போறாங்க என்கிற ஐயம் தெளிவு பெறும் வகையில் முதல் அறிமுக நிகழ்ச்சியையே வித்தியாசமா கொடுத்திருந்தாங்க பிக் பாஸ் டீம். ” 14 போட்டியாளர்கள், 30 கேமராக்கள், 100 நாட்கள், ஒரே வீடு” என துவங்கிய பிக் பாஸில் ’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்கிற வசனத்தோடு  ரசிகர்களோடு அமர்ந்திருந்து என்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன்.  

தனது ஒவ்வொரு வசனத்திற்கும் இடையில் பிக் பாஸின் விதிமுறைகளை ஒவ்வொன்றாக விளக்க,  நடித்து காண்பித்து தெளிவுபடுத்திய கமல், பிக் பாஸ் வீட்டிற்கான அறிமுகத்தையும் வீட்டிற்குள் நடந்த படியே ஒவ்வொரு ரூம்-ஆக காண்பித்து விளக்கினார். இதன் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் முதலில் சென்றவர் கமல் தான். அதன் பின்னர் ஒருவரை அடுத்து ஒருவராக பிக் பாஸ் போட்டியாளர்கள் நடனமும் , இசையுமாக என்ட்ரி கொடுத்து தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டனர். அழகாக ஷோவுக்குள் எண்ட்ரி கொடுத்தவர்களின் கோரத்தாண்டவத்தை அடுத்த எபிஷோட்களில் நம்மால் பார்க்க முடிந்தது. முதல் சீசனிலேயே பலரின் உண்மை முகம் வெளிகொண்ரப்பட்டது. கேமராக்கள் இருப்பதை மறந்து போட்டியாளர்கள் செய்த கூத்து இன்றளவும் மக்கள் மத்தியில் பிக் பாஸ் போட்டியாளர்களை பிரபலமாக வைத்துள்ளது என்றே சொல்லலாம். 

அடுத்து துவங்கிய பிக் பாஸ் - 2வில் உங்களில் யார் நல்லவர்? யார் கெட்டவர்? என பார்க்கலாம் என துவங்கினார் கமல். அதோடு பிக் பாஸ் வீட்டிற்கும் அறிமுகம் கொடுக்கத் தவறவில்லை. பிக் பாஸ் சீசன் 1ல் அமைக்கப்பட்ட வீட்டிற்கும், சீசன் 2 ல் அமைக்கப்பட்ட வீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கிய கமல் முந்தைய சீசன் போலவே இதிலும் பங்கேற்பாளர்களை ஆடலும், பாடலுமாக வரவேற்றார். அதோடு முந்தைய நிகழ்ச்சி குறித்த புரிதல் ஏதுமில்லாமல் நடந்ததால் வெற்றி பெற்ற பிக் பாஸ். தற்போது இன்னது என தெளிந்த பிறகு நடிப்பு போலல்லவா தோன்றும் என விமர்சித்த மக்களிடையே சீசன் 2வும் நல்ல வெற்றியை கண்டது என்றே சொல்லலாம்.  கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு இந்த சீசன் துவங்கியதால் கமலின் வசனங்கள் பெரும்பாலும் அரசியல் நையாண்டியாகவே இருந்தது. 

நல்ல டி.ஆர்.பியை பெற்றுத்தந்த பிக் பாஸின் 3 வது சீசனுக்கான வேலைகளையும் பரபரப்பாக துவங்கி விட்டது விஜய் டெலிவிஷன். அதன் ஒரு பகுதியாக கமல் ஹாசனின் ப்ரோமோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர் விஜய் டிவி. அதோடு வரும் ஜூன் 23ம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த சீசனில், 'இது வெறும் ஷோ இல்ல.. நம்ம லைஃப்' என்கிற வசனத்துடன் தான் துவங்க உள்ளார் கமல்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close