பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும்  கர்நாடக இசைக் கலைஞர்!

  கண்மணி   | Last Modified : 17 Jun, 2019 03:26 pm
another-singer-who-participate-in-the-bigg-boss-3

வெள்ளித்திரையில்  பிரபலமடையாத  பலரை சின்னத்திரை மூலம் மக்கள் அறிந்த நபராக மாற்றிய நிகழ்ச்சி பிக் பாஸ். அதோடு பிரபல சினிமா நாயகனான கமல் ஹாசனை தொகுப்பாளராக மாற்றிய பெருமையும் பிக் பாஸுக்கே உண்டு . இரண்டு சீசனின்  வெற்றிக்கு பிறகு தற்போது மூன்றாவது சீசனுக்கும்  ரெடியாகி விட்டது பிக் பாஸ்.  

மற்ற ரியாலிட்டி ஷோக்கள் போலல்லாமல், பிரபலங்களின் உண்மை தோற்றத்தை வெளிக்காட்டிய நிகழ்ச்சியான பிக் பாஸ் மக்கள் மத்தியில் மிக பிரபலம். பட்டி தொட்டியெல்லாம் விஜய் டிவியை பிரபலமாக்கி டி ஆர் பி ரேட்டிங்கை எகிற வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒரு முறையாவது பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது.

தற்போது பிக் பாஸ் 3ல் யார், யார் பங்கேற்க போகிறார்கள் என்கிற கேள்வி பலரின் மனதில் தொற்றிக்கொண்டுள்ளது . அரசல்புரசலாக இவர், அவர் என்கிற தகவல் பரவிய வண்ணம் உள்ளது.  அதன்படி பிரபல கர்நாடக இசைக் கலைஞர், பாடகரும் மற்றும் நடிகருமான 'மோகன் வைத்யா' இந்த சீசனில் பங்கேற்பார் என தெரிய வந்துள்ளது. இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய அந்நியன், இயக்குநர் பாலாவின் முதல் திரைப்படமான சேது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் 2 வில் கர்நாடக இசை நிபுணரும்,  பாடகருமான ஆனந்த் வைத்தியநாதன் பங்கேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

newstm.in  

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close