பிக்பாஸ் வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்!

  விசேஷா   | Last Modified : 25 Jun, 2019 03:59 pm
big-boss-3-water-shortage-in-big-boss-house

ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் சீசன் 3 ஒளிபரப்பு துவங்கிவிட்டது. இதில், பல்வேறு செலிபிரிட்டிகள், நடிகர்கள் என மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான பலரும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கென, பிரமாண்ட வீட்டில், அழகான செட் அமைக்கப்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு மேல் இவர்கள் இங்கு தங்க உள்ளனர். 

அவர்களுக்கு தேவையான உணவு, உடை, தண்ணீர் உள்ளிட்ட அத்தனையும் வீட்டிற்குள்ளேயே வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்னை பிக்பாஸ் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. 

ஆம்... பிக்பாஸ் வீட்டில் தங்கியிருப்போர், தண்ணீர், சமையம் எரிவாயுவை சிக்கனமாக செலவழிக்கும் வகையில், பிரத்யேக மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சமைக்க, குடிக்க, 1000 லிட்டர் தண்ணீரும், குளிக்கவும், பிற பயன்பாடுகளுக்காவும், ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீர் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், ஒரு வாரத்திற்கு 5 கிலோ சமையல் எரிவாயு மட்டுமே வினியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அளவு தெரியாமல் தண்ணீர், காஸ் செலவழித்து விட்டு, வரும் எபிசோடுகளில் போட்டியாளர்கள் புலம்புவதை விரைவில் எதிர்பார்க்கவும் அதிக வாய்ப்புள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close