பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள 16வது போட்டியாளர் யாரென்று தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 26 Jun, 2019 11:54 am
16th-contesten-in-biggboss3

பிக் பாஸ் சீசன் 3 கோலகலாமாக கடந்த 23ம் தேதி முதல் துவங்கி கலகலப்பாக நடைபெற்று வருகிறது. 15 போட்டியாளர்களும் ஒரளவிற்கு பரஸ்பரமாக செட் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக 16 போட்டியாளராக மீராமிதுன்  களம் இறக்கப்பட்டுள்ளார்.  இவர் யாருனு தெரியுமா?

சமீபத்தில் தமிழக பெண்களுக்கான மிஸ் இந்தியா அழகி போட்டியை  நடத்த உள்ளதாகவும்.  இந்த போட்டியை நடத்தகூடாது என்று தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் சென்னை காவல் ஆணையரிடம்  புகார் அளித்து பிரபலமானவர் இவர் .

 அதோடு 'தானா சேர்ந்த கூட்டம்' , '8 தோட்டாக்கள்' போன்ற பல்வேறு படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் இவர் மீது  அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பண மோசடி செய்ததாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய 3 ம் நாள் களம் இறக்கப்பட்டுள்ளார். இவரை கண்டவுடன் அதிர்ச்சியடைந்துள்ள பிக் பாஸ் சீசன் 3ன் மற்ற போட்டியாளார்கள், மீராமிதுனை ஏற்று கொள்ள தொடர்ந்து தயக்கமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இனி வரும் நாட்களில் மீராமிதுன் 100 நாட்கள் தாக்குபிடிப்பாரா அல்லது சக போட்டியாளார்களால் வெளியில் அனுப்பப்படுவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

போலீசில் புகார் அளித்ததால் பறிபோனது 'மிஸ் சவுத் இந்தியா' பட்டம்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close