வனிதாவையே சட்ஆப்  பண்ணிட்டாங்க மதுமிதா: பிக்பாஸ் 3 ப்ரோமோ உள்ளே!

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 11:51 am
biggboss3-today-episode-promo

நல்ல இருந்த வீட்டுல ஒரு பாட்டிலை குழந்தையாக்கியதால் மிக பெரிய கலவரமே நடைபெற்று வருகிறது. பாட்டில் விசயத்தில், அபிராமிக்கும் மதுமிதாவுக்கும் தான் முதலில் சண்டை வந்துச்சு அதை தொடர்ந்து, வீட்டில் உள்ள பெரும்பால நபர்கள் மதுமிதாவோட சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க. அதிலேயும் வனிதாவின் வார்த்தைகள் ரொம்ப கடுமையாவே  இருக்கிறது.

ஏற்கனவே நடந்த வாக்குவாதத்தில் உன்னோட கணவர் இப்ப கூட இருக்காரு வருங்காலம் எப்படி இருக்கும்னு மதுமிதாவ பாத்து கேட்டவங்க. இன்றைய எபிசோடிலும் சம்மந்தமில்லாம ஆஜராகி ’ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பி மாதிரி இருப்பாங்களா, ஆனால் அவங்க செய்கிற காரியங்களை எல்லாம் நம்பவே முடியாது,

கட்டின தாலியை கழற்றி வைத்துவிட்டு வருவாங்களாம், ஆனால் அந்த பொண்ணு ஒரு பாட்டிலை வைத்து குழந்தை போன்று காட்டினால் அதை தப்புனு சொல்லுவாங்கலாம்” என கூறி மதுமிதாவை கடுப்பேத்துகிறார்.

அதற்கு நீங்க பேசலையானு மதுமிதா கேட்க எப்பவும் போல சட்ஆப் சொல்லி வாயை அடைக்க பார்க்கிறார் வனிதா.  மத்தவங்க மாதிரி அமைதியா போகாமல், முதலில் நீங்க சட்ஆப்   பண்ணுங்கனு மதுமிதா சொல்ல, எதிர்பாரத மொக்கையால் அதிர்ச்சியாகிறார் வனிதா.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close