கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள்  : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 16 Aug, 2019 01:00 pm
bigg-boss3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல்  வனிதா மீண்டும் வீட்டிற்குள் வந்த பிறகு ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு கொள்கின்றனர்.

தர்ஷன், முகேன், சாண்டி , கவின்  மற்றும் இவர்களுடன் லாஸ்லியா ஆகியோர் ஓரணியாக சேர்ந்து பெண் போட்டியாளர்களை அவ்வப்போது மட்டம் தட்டுவதும், கிண்டலடிப்பதுமாக இருக்கின்றனர்.

ஏற்கனவே, பெண்களை அடிமை படுத்துவது போல செயல்படுகிறீர்கள் என மதுமிதா கேட்க அந்த விவாதம் கவினின் காதல் விளையாட்டில் வந்து முடிந்தது.

இந்நிலையில் சாண்டியிடம் பேச முற்படும் கஸ்தூரியை பேச விடாமல் கவின் தடுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் கஸ்தூரி, கவினின் காதல் குறித்து விமர்சித்தப்படி வெளியில் செல்கிறார். இதனால் கோபமடையும் ஆண்  போட்டியாளர்கள் கஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close