மதுமிதாவை தற்கொலை செய்துகொள்ள தூண்டினார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்?

  கண்மணி   | Last Modified : 18 Aug, 2019 09:52 am
bigg-boss3-competitors-prompted-madhumitha-to-commit-suicide

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் நடிகை மதுமிதா. இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் வாரத்திலேயே வீட்டிற்குள் நடந்த கலாச்சார சீர்கேட்டிற்கு எதிராக குரல் கொடுத்து மற்ற போட்டியாளர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். எந்த விஷயத்தையும் மன வலிமையோடு எதிர்கொள்ளும் பண்பு கொண்டவர் என அனைவராலும் கூறப்படும் மதுமிதா.

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வனிதா வந்த பிறகு கவின் , முகேன் உள்ளிட்டோரின் நடவடிக்கையை கடுமையாக கண்டித்திருந்தார். அதோடு அபிராமிக்கு ஆதரவாக பல போட்டியாளர்களிடன் வாக்குவாதமும் செய்திருந்தார்.

இதற்கிடையே கடந்த வார இறுதி நாளில் யார் டைட்டில் வின்னர் என்ற கேள்விக்கு மதுமிதாவின் பெயரும் கூறப்பட்டது. இந்த காரணங்களால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் மதுமிதா மீது சற்று கடுப்புடன் அவ்வப்போது அவரை சீண்டி கொண்டுதான் இருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டியில் மதுமிதா வெற்றியடைந்தார். அவரது வெற்றியால் அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் மதுவை கடுமையா விமர்சித்ததுடன் சேரன், கஸ்தூரி தவிர மற்ற போட்டியாளர்கள் மதுமிதா இந்த வீட்டின் தலைவராக இருந்தால் வீட்டை  விட்டு வெளியேறுவோம் என கூறியுள்ளனர்.

இந்த பிரச்னைகளால் மனமுடையும் மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே தற்கொலை எண்ணத்தை தூண்டியதற்காக போட்டியாளர்கள் மீது மது தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் பிக் பாஸ் பார்வையாளர்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close