வித்யாசமான முறையில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 23 Aug, 2019 01:32 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் கொடுக்கப்பட்ட கிண்டர் கார்டன் டாஸ்கில் சிறப்பாக விளையாடிய போட்டியாளர்களாக சேரன், லாஸ்லியா, சாண்டி ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரில் ஒருவர்  இந்த வார பிக் பாஸ் வீட்டிற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். 

பொதுவாக தலைவர் பதவிக்கு நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களுக்கிடையே பலப்பரீட்சை  நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெரும் போட்டியாளரே தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால் இந்த வாரம் மூன்று போட்டியாளர்களின் பெயர்கள் சீட்டுக்களில் எழுதி போடப்பட்டுள்ளது.

அதில் 5 முறை யாருடைய பெயர் எடுக்கப்படுகிறதோ, அவர் தான் இந்த வார தலைவர் என கூறப்பட்டுள்ளது. அதன் படி சேரன் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close