'கிரீக் காட் ஆஃப் பாலிவுட்' ரித்திக் ரோஷனின் பிறந்தநாள் ஸ்பெஷல்

  Sujatha   | Last Modified : 11 Jan, 2018 10:06 am

திரைத் துறையில் முக்கியமான ஓர் இயக்குநர் அவர். மகனை ஹீரோவாக்கிப் பார்க்க வேண்டும் என நினைத்தார். அதற்கு மகன்தான் காரணம். குடும்பத்துக்கு ஒரே வாரிசான செல்வமகனின் பிடிவாதமும், மனைவியின் நச்சரிப்பும் அந்த இயக்குநரை படம் எடுக்க வைத்தது. ரசித்து ரசித்து ஒரு கதை எழுதி, படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர். மகனின் முகவெட்டில் சில பிரச்னைகள்! போட்டோ ஷூட் செய்தபோது சிலர், இந்த ஆங்கிள்ல ஷாட் வெச்சா ம்ஹூம்... வேலைக்கு ஆகாது! எதுக்கு விஷப்பரீட்சை! என ஆரம்பத்திலேயே அபாய சங்கு ஊதினார்கள். முதலீடு செய்யும் பணம் திரும்பப் போவதில்லை என முடிவு கட்டியே; படத்தை ஆரம்பித்தார். ஒவ்வொரு காட்சியையும் கவனத்துடன் ஷூட் செய்தார். ஏகப்பட்ட ரீடேக்குகள், ஏகப்பட்ட செலவுகள்.. எதைப் பற்றியும் கவலையின்றி மகனுக்காகச் செய்தார்.

படத்தை எடுத்து முடித்ததும் வியாபாரம் பேசுவதற்காக விநியோகஸ்தர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டினார். படம் பார்த்தவர்கள் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு எதுவும் சொல்லாமல் போனார்கள். மனம் தளராத அந்த இயக்குநர்; படத்தை அவரே ரிலீஸ் செய்தார். படம் பிளாக் பஸ்டர்..! இதை அந்த இயக்குநரே எதிர்பார்க்கவில்லை. முகவெட்டு சரியில்லை என சபிக்கப்பட்ட அந்த ஹீரோவின் முகம் இளம் பெண்களுக்குப் பிடித்த முகமானது! முதல் படத்திலேயே ஏகப்பட்ட பெண் ரசிகைகள். அரங்குகளில் ரசிகர்களின் ஆராவாரம். அதுவரை அறிமுக நாயகர்கள் யாருக்கும் கிடைக்காத வரவேற்பு. அதன் பிறகு, தொட்டதெல்லாம் ஹிட். நடனத்துக்கு அவர்தான் அகராதி. கோடிக்கணக்கான ரசிகர்கள். சினிமா உலகத்தில் தவிர்க்க முடியாத சக்தி ஆனார். அந்த ஹீரோ இந்தி நடிகர்ஹிருத்திக் ரோஷன்..! அந்த அப்பா, ராகேஷ் ரோஷன். அந்தப் படம் கஹோ நா ப்யார் ஹை. அவரது பிறந்த நாளான இன்று அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...

10 -1 -1970ம் ஆண்டு சினிமா பிரபலங்கள் அடங்கிய பஞ்சாபி ஹிந்து குடும்பத்தில் மும்பையில் ஹிரித்திக் ரோஷன் பிறந்தார். இவரது தந்தை ராகேஷ் ரித்திக் திரைப்பட இயக்குநர். தாய் பிங்கி தயாரிப்பாளர். ரித்திக் ரோஷனுக்கு வலது கையில் ஆறாவதாக ஒரு விரல் உண்டு. இதனால், இவரை மற்றவர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். இதனால், சிறு வயதில் தனிமையில்தான் இருப்பாராம் ரித்திக். பேரனின் நிலை கண்டு வருந்திய தாத்தா பிரகாஷ், ரித்திக்கை முதன்முதலாக திரையில் அறிமுகம் செய்தார். திரை உலகில் 1980களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரித்திக், ஆஷா, ஆப் கி தீவானே, பகவான் தாதா போன்ற படங்களில் குழந்தை நட்சித்திரமாக ஜொலித்தார். அவர் முதல் படமான ஆஷாவில் வாங்கிய சம்பளம் ரூ.100. 1996ம் ஆண்டு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பகவான் தாதா என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடதித்திருக்கிறார் ரித்திக்.

2000 ம் ஆண்டில் 'கஹோ நா... பியார் ஹே' என்னும் திரைப்படத்தில் ஹிரித்திக் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தில் அவரது நாயகி மற்றொரு புதிய அறிமுகமான அமீஷா படேல் ஆவார். இவரது தந்தை இயக்கி, அவரது சகோதரர் இசையமைத்து ரித்திக் இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் இவருக்கு இரண்டு ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றுத்தந்தது. (சிறந்த நடிகர் விருது & சிறந்த அறிமுகத்துக்கான விருது). இத்திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் மட்டும் 102 விருதுகளைப் பெற்று, அதிக விருதுகள் வென்ற சாதனைக்காக லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது

தொடர்ந்து இவர் நடித்த கோயி... மில் கயா, க்ரிஷ், தூம் 2, ஜோதா அக்பர் போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஃபிலிம்ஃபேர் விருதினை பெற்று தந்தது. ஜோதா அக்பர் இது வரை வெளிவந்த திரைபடங்களில் வர்த்தக ரீதியில் பெரும் வெற்றி பெற்றதுடன் இந்த படத்திற்காக அவருக்கு பல்வேறு சிறந்த நடிகர் விருதுகளும் வழங்கபட்டன.

ஐஸ்வர்யா ராய் - ரித்திக்: உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து இவர் தூம் 2, ஜோதா அக்பர், குஜாரிஷ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.. முதல் இரு படங்கள் மிக பெரிய வெற்றிப் பெற்றாலும், மிக எதிர்பார்ப்புகளுக்கு இடையே எடுக்கப்பட்ட குஜாரிஷ் திரைப்படம் படு தோல்வியை தழுவியது.

பிரியங்கா சோப்ரா- ரித்திக்: உலக அழகிகளுடனே நடிப்பதை ஃபார்முலாவாக கொண்ட ரித்திக். அடுத்து ப்ரியங்கா சோப்ராவுடன் இணைந்து க்ரிஷ்,க்ரிஷ்3, அக்னீபாத் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்பினேஷனில் வெளிவந்த படங்கள் அனைத்தும் 'பிளாக் பஸ்டர் ஹிட்' லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

கத்ரீனா கைப்- ரித்திக் : லண்டன் குயின் கத்ரீனா கைப்புடன் ரித்திக்கிற்கு நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது என்று சொல்லலாம். இவர்கள் இணைந்து 'ஜின்டாகி நா மிளகி டோபரா, மெயின் கிருஷ்ணா ஹூன், பெங் பெங் போன்ற வெற்றி படங்களை தந்தாலும், இருவருக்குள்ளும் இருக்கும் நட்பின் காரணமாக ரித்திக்கின் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு கத்ரீனா நடனம் ஆடி உள்ளார். ஒரு பாடலுக்கு கோடிகளில் கத்ரீனா சம்பளம் வாங்கியுள்ளார். (என்ன தான் ப்ரண்டா இருந்தாலும் சம்பள விஷயத்தில் மேடம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் போல).

சல்மான் கான்- ரித்திக்: இதுவரைக்கும் ஹீரோயின் கூட இருந்த கெமிஸ்ட்ரிய பத்தி பேசின நாம, ஹீரோ கூட இருக்க நட்ப பத்தி பேசலனா நல்லா இருக்குமா? நம்ம ரித்திக் அறிமுக படம் வரைக்கும் உடற்பயிற்சிக்கு அட்வைஸ் தந்தது எல்லாம் வேற யாரும் இல்லங்க நம்ம சல்லு பாய் (சல்மான் கான்) தாங்க. சல்மான் ஜி நீங்க பின்னுறீங்க..

சிக்ஸ் பேக் ரித்திக்: இப்போ ரித்திக் சும்மா சிக்ஸ் பேக்கோட சிக்குன்னு இருக்குறதுக்கு அவரோட ட்ரைனர் 'கிரிஸ் கெத்தின்' தான் காரணம். ஆணழகனா ரிதிக்கை காட்டும் 'கிரிஸ் கெத்தின்' மாத சம்பளம் ரூ. 20 லட்சம்... (ப்ளீஸ் கிளோஸ் யுவர் மௌத்!)

ப்ராண்ட் அம்பாஸ்டர்: CureFit என்ற நிறுவனம் 5 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 100 கோடி சம்பளத்தில் ரித்திக்கை ப்ராண்ட் அம்பாஸ்டராக தேர்வு செய்துள்ளது.

திருமணம் : 2000ம் ஆண்டு சுஷேன் ரோஷன்ஸ் ஹவுஸ் ஆஃப் டிசைன் உரிமையாளர் மற்றும் சஞ்சய் கான் அவர்களின் மகள் சுசேன் கான் அவர்களை ரித்திக் திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹிரேஹன் 2006 லும் மற்றும் ஹ்ரிதான் 2008 லும் பிறந்தனர். 2014ம் ஆண்டு ரித்திக்-சுசேனுக்கு விவாகரத்தாகிவிட்டது.

திரை பயணம்: இதுவரை 21படங்களில் நடித்துள்ள ரித்திக், 5 பிளாக் பஸ்டர், 4 ஹிட், 7 பிளாப் படங்களை தந்துள்ளார். மற்றவை சுமார் ரகங்களே!!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close