ஃபேமஸ் பாலிவுட் ஹீரோயின்கள் என்ன படிச்சிருக்காங்க தெரியுமா?

  நந்தினி   | Last Modified : 30 Jan, 2018 07:48 pm

படிப்பு இருந்தா போதும்... பெயர், பணம், புகழ்ன்னு எல்லாம் நம்மை தேடி வரும்னு சொல்வாங்க. யாராவது ஒருத்தர் உங்ககிட்ட வந்து நிறைய பணம், மரியாதை, கவுரவம் இதெல்லாம் எப்படி சம்பாதிக்கிறது என்று கேட்டால் நம்முடைய பதில், நல்லா படிக்கனும் என்பதுதான். அது உண்மையும் கூடத்தான். இருந்தாலும் இதில் சில விதிவிலக்குகளும் உண்டு. படிச்ச படிப்புக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமலேயே புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் சினிமா பிரபலங்கள். ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்த வுட்-ம் இதற்கு விதி விலக்கு இல்லை. பிரபல பாலிவுட் நடிகைகள் 12 பேரோட படிப்பு என்னன்னு பார்க்கலாம்...

1. அமிஷா படேல்: பாலிவுட்டில் மிகவும் படித்த நடிகை அமிஷா. பொருளாதாரம் பட்டம் பெற்றுள்ளார். அதில் தங்கப்பதக்கமும் வென்றிருக்கிறார். இது தவிர, உயிரி மரபணு பொறியியல் படிப்பை, வெளியூரில் படித்து பட்டம் வாங்கியுள்ளார்.

2. சோனாக்ஷி சின்ஹா: பாலிவுட் நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், ஃபேஷன் வடிவமைப்பு படிப்பில் டிகிரி வாங்கியுள்ளார்.

3. சோஹா அலி கான்: மாடலும் நடிகையுமான சோஹா அலி கான் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் அன்ட் பொலிட்டிக்கல் சயின்ஸில் 'இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ்' பற்றிய படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

4. ப்ரீத்தி ஜிந்தா: ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டமும் மற்றும் குற்றவியல் உளவியலில் முதுநிலை பட்டத்தையும் படித்திருக்கிறார். கல்வி என்று வந்துவிட்டால், எப்போது ப்ரீத்தி ஜிந்தா முதலிடம் வகிப்பார்.

5. பரினீத்தி சோப்ரா: இவர் வர்த்தகம், பொருளாதாரம், நிதி ஆகியவற்றின் முறையே மூன்று கௌரவ பட்டங்களை தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய படிப்பை, இங்கிலாந்தின் மான்செஸ்டர் பிசினஸ் பள்ளியில் முடித்தார்.

6. வித்யா பாலன்: மும்பை பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற வித்யா பாலன், அதில் முதுகலை பட்டத்தை பெற்றார்.

7. அனுஷ்கா சர்மா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்டின் மனைவியும், பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மா, ராணுவ பள்ளியில், பள்ளி படிப்பையும், மும்பையில் கலையில் இளங்கலை படிப்பையும் முடித்திருக்கிறார்.

8. கங்கனா ரனாவத்: சண்டிகரில் டிஏவி பள்ளியில், கங்கனா பள்ளி படிப்பை முடித்தார். மருத்துவ அறிவியலில் சாதிக்க வேண்டும் என்ற அவரது கனவு கடைசி வரையில் நிறைவேறாமலே போனது.

9. அலியா பட்: மிகவும் குறுகிய காலத்தில் பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இணைந்த அலியா, பள்ளி படிப்பை மட்டுமே முடித்துள்ளார். பள்ளி படிப்பை முடித்த கையோடு, அவர் பாலிவுட்டிற்குள் நுழைந்துவிட்டார். அவருடைய ஆரம்ப பள்ளி, ஜாம்நபி நர்சரி பள்ளியில் இருந்து துவங்கியது.

10. ஐஸ்வர்யா ராய்: மக்கள் மனதில் இன்னும் உலக அழகியாகவே இருக்கும் ஐஸ்வர்யா ராய், கட்டிடக்கலை பயின்று வந்தார். அந்த நேரம், அவருக்கு மாடல் மற்றும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து அலைமோதியதால், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.

11. கரிஷ்மா கபூர்: புகழ் பெற்ற திரைப்பட குடும்பமான கபூர் குடும்பத்தில் பிறந்தவர். கதீட்ரல், ஜான் கேனன் பள்ளியில் பள்ளிப் பிப்பை முடித்தார். அதன்பிறகு மும்பையின் பிரபல சோபியா கல்லூரிக்கு சில மாதங்கள் சென்றாராம். அதற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே, படிப்பை கரிஷ்மா நிறுத்திவிட்டாராம்.

12. கத்ரீனா கைஃப்: அப்பா பிசினஸ் மேன், அம்மா வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர். இதனால், இவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்துகொண்டே இருந்தனர். இதனால், கத்ரீனா மற்றும் அவரது சகோதர, சகோதரிகளால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை. கத்ரினா பிறந்தது ஹாங்காங்கில்... அதன்பிறகு சீனா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து என்று இவர்கள் குடும்பம் சுற்றிக்கொண்டே இருந்ததாம். இதனால், கத்ரீனாவுக்கும் அவருடன் பிறந்தவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களால் வீட்டில் வைத்தே கல்வி கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.