இந்திரா காந்தியாக நடிக்கும் வித்யாபாலன்

  பால பாரதி   | Last Modified : 12 Jan, 2018 04:41 pm


வர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய வித்யா பாலன், இப்போது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்கத் தயாராகி வருகிறார்.  

நடிகை வித்யா பாலன், இந்திப் படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து வருபவர். இவர்,மறைந்த பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை சொன்ன’டர்ட்டி பிக்சர்’படத்தில் சில்க் ஸ்மிதாவாக கதாப்பத்திரத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் பிரபலமானதோடு, இந்தப் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார் நடிகை வித்யா பாலன். 

இந்நிலையில் வித்யாபாலன், அடுத்ததாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில், இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கப் போகிறாராம்!  


இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து, பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலினை திரைப்படம் ஆக தயாரிப்பதற்கான உரிமையை நடிகை வித்யா பாலன், ராய் கபூர் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சகாரிகா கோஷிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை சகாரிகா கோஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்திராவை வெள்ளித்திரையில் பார்ப்பதற்காக பரவசத்துடன் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close